Furio

மஹிந்திராவின் இடைநிலை வர்த்தக வாகன ரகங்கள் மற்றும் டிரக்குகள் 11 லிருந்து 14 டன் வகைகளில் வருகிறது மற்றும் இது ஒவ்வொரு வர்த்தக பயன்பாட்டிற்கும் பொருத்தமானது. மஹிந்திரா Furio மற்றவர்களை கவர்ந்திழுக்கும் தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் சிறந்த செயல்திறனை வழங்குகிறது.

அம்சங்கள் மற்றும் யுஎஸ்பி-க்கள்:

அதிக பொருட்களை கொண்டு செல்கிறது, அதிக வருமானத்தை வழங்குகிறது

மஹிந்திராவின் Furio இரண்டு சரக்கு கட்டமைப்பு நீள விருப்பத்தேர்வுகளுடன் அனைத்து வர்த்தக பயன்பாட்டிற்கும் பொருத்தமானது. கூடுதலாக, இதன் அதிக சரக்குகளை எடுத்துச் செல்லும் திறன் காரணமாக ஒவ்வொரு விநியோகத்தித்தின் மீதும் அதிக வருமானத்தை உங்களுக்கு வழங்குகிறது.

அறிவார்ந்த ஓட்டுநர் தகவல் அமைப்பு (DIS):

மஹிந்திராவின் ICV டிரக்கின் ஓட்டுநர் தகவல் அமைப்பானது, டிரக்கின் முக்கிய தகவல்களை விரைவாக பார்க்கவும், அதன் செயல்திறனை தொடர்ந்து கண்காணிக்கவும் ஓட்டுநருக்கு உதவுகிறது. டிரக்கின் அனைத்து செயல்திறன் புள்ளிவிவரங்களையும் பற்றி எப்பொழுதும் தெரிந்துகொள்ள விரைவாக ஒருமுறை இதைப் பார்க்கவும்

அதிக வசதி அதிக வருமானத்திற்கு வழிவகுக்கிறது

மஹிந்திராவின் ஐசிவி பிரிவைச் சார்ந்த FURIO பல வழிகளில் யோசித்து சிறப்பாக கட்டமைக்கப்பட்டதாகும். ஒரு நல்ல இடவசதியுடன் நடந்து கடந்து செல்ல ஏதுவாக அமைக்கப்பட்ட கேபின் காரணமாக உள்ளே வருவதும் வெளியேறுவதும் மிக எளிது. லவுஞ்சிங் ஏற்பாடு சகஓட்டுநரை வாகனம் ஓட்டும்போது ஓய்வெடுக்க அனுமதிக்கிறது, அதே நேரத்தில் நிறுத்தத்தின் போது ஓட்டுநர் டிரக்கிலிருந்து வெளியேறாமல் ஓய்வெடுக்க முடியும்.

அதிக இயக்க நேரத்திற்கு மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் அதிக வருமானம்:

மஹிந்திரா FURIO அதன் பிரிவின் பாதுகாப்பு தரங்களை இன்னும் உயர்த்துகிறது. இது இந்திய தர அளவுகோல்களை விஞ்சியுள்ளது. பாதுகாப்பு நிலையை அதிகரிக்க டூயல் சேம்பர் ஹெட்லேம்ப்புகள் நீண்ட தூரத்திற்கு ஒளி வீசுகிறது. ICV பிரிவிலேயே முதலாவதான இந்த அகன்று ஓளி வீசும் ஃபாக் லேம்ப்புகள், இரவில் திருப்பங்களைச் சுற்றிலும் வெளிச்சத்தைப் பரப்பி சாலையை தெளிவாகக் காண காண்புநிலையை அதிகரிக்கின்றன.

பொருத்தமானது:

மஹிந்திரா Furio பழங்கள் மற்றும் காய்கறிகளை விநியோகம் செய்வதற்கும், இ-காமர்ஸ் பார்சல்கள், தொழில்துறை பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், எஃப்.எம்.சி.ஜி, சந்தைப் பொருட்கள், மருந்து பொருட்கள் போன்ற அனைத்து வடிவங்கள் அல்லது எடைகள் கொண்ட பொருட்களை விநியோகிக்க பொருத்தமான ICV ஆகும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மஹிந்திரா Furio இல் சக்திவாய்ந்த mDi தொழில்நுட்ப எஞ்சின், 4 சிலிண்டர், BS-VI (EGR + SCR தொழில்நுட்பத்துடன்) மற்றும் 160 முதல் 190 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க்# 235/330 லிட்டர் (விருப்பத் தேர்வு).

மஹிந்திரா Furio BS-VI உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான ரகமாகும்.

மஹிந்திராவின் LCV பிரிவில் 7 Furio மாடல்கள் உள்ளன.

Furio 14 BS6 இல் ஒரு 14050 கிலோ GVW உள்ளது .