8

'RISE' தத்துவத்தை உணர்ந்து, மஹிந்திரா டிரக் & பஸ், இந்திய டிரக் ஓட்டுனர் சமூகத்தில் வெளிச்சம் ஒளிர்வதற்காக 'சார்தி' இயக்கத்தை தொடங்கியுள்ளது. இந்த தனித்துவமான சிஎஸ்ஆர் திட்டம் டிரக் ஓட்டுநர்களுக்கு மட்டுமின்றி அவர்களது குடும்பங்களுக்கும் உதவுகிறது. சார்தி இயக்கத்தின் முதல் கட்டம் மனதை தொடும் புகழ் பெற்ற ஸ்காலர்ஷிப் திட்டத்துடன் தொடங்கியது. இது லாரி டிரைவர்களின் மகள்களுக்கு வழங்கப்பட்டது. இதில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மேற்படிப்பு படிக்கும் திறமையான பெண்களுக்கு ரூ. 10,000 உதவித்தொகை வழங்கப்பட்டது. இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொண்ட போதும் தங்கள் மகள்களை படிக்க வைத்திருக்கும் அனைத்து டிரக் டிரைவர்களுக்கும் இந்த முயற்சி ஒரு சல்யூட் செய்யும் விதமாக இருந்தது. ஆனால் இது ஒரு ஆரம்பம் மட்டுமே. சார்தி இயக்கத்தின் மூலம் இந்தப் பயணத்தைத் தொடர்வதன் மூலம், லாரி ஓட்டுநர்களைக் கவனித்துக் கொள்வதற்கான எங்கள் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றுவோம்.

7

எதிர்பார்த்ததை விட சிறந்த செயல்திறன். இது மஹிந்திரா & மஹிந்திராவை ஒரு புதிய சகாப்தத்திற்கு கொண்டு வரும் தத்துவம் ஆகும். இந்தியப் போக்குவரத்து துறை புதிய உயரங்களை எட்டுவதற்கு உதவும் சகாப்தம். இந்த தத்துவத்துடன்தான் நாங்கள் மஹிந்திரா டிரான்ஸ்போர்ட் எக்ஸலன்ஸ் அவார்ட்ஸை ஆரம்பித்துள்ளோம். இந்த விருதுகள் இந்திய டிரக் தொழிலில் சிறந்த செயல்திறன், சிறந்து விளங்குதல், புதுமை மற்றும் தலைமை மாற்ற அங்கீகரிப்பு போன்வற்றிற்கு உரியவை ஆகும், மேலும் இந்த ஃபோரம் ஆண்டு முழுவதும் சிறப்பான மற்றும் குறிப்பிடத்தக்க செயல்திறனை வெளிப்படுத்துவதோடு, முழுத் தொழிலையும் ஊக்குவிக்கும் தரநிலைகளை அமைக்கின்றது. மேலும் விவரங்களுக்கு மஹிந்திரா டிரான்ஸ்போர்ட் எக்ஸலன்ஸ் அவார்ட்ஸ் இணையதளத்தைப் பார்க்கவும்.  மஹிந்திரா டிரான்ஸ்போர்ட் எக்ஸலன்ஸ் விருதுகள்

6

மஹிந்திரா டிரக் & பஸ் இளைஞர்களை போக்குவரத்து துறையில் நுழைய ஊக்குவிப்பதன் மூலமும், அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலமும் மிகச் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக, இளம் போக்குவரத்து தொழில் முனைவோருக்கான மேலாண்மை மேம்பாட்டுத் திட்டமான MPOWER என்ற திட்டத்தை நாங்கள் உருவாக்கி உருவாக்கியுள்ளோம். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்,அகமதாபாத் (IIM-A), இந்தியன் மரிடைம் யூனிவர்சிட்டி (IMU) மற்றும் அனந்தரா சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் போன்றவற்றுடன் இணைந்து போட்டித் தொழிலுக்கு அவர்களை நன்கு தயார்படுத்தி, அதே நேரத்தில் சிறந்து விளங்கச் செய்துள்ளோம். அவர்களின் துறையில் இருக்கும் சிறந்த மற்றும் புகழ்பெற்ற நிறுவனங்கள் நாலெட்ஜ் பார்ட்னர்களாக்கப்பட்டுள்ளன.

5

இது இந்திய டிரக்கிங் துறையில் இருந்து பயிற்சியாளர்களை (மென்டர்ஸ்) மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கூட்டு கற்றல் திட்டமாகும். இந்த தளத்தில், தொழில்துறையைச் சேர்ந்த அனுபவம் மிக்கவர்கள், லாரி தொகுப்பு உரிமையாளர்கள், அனுபவ புரஃபஷனல்களுடன் போக்குவரத்துத் துறையில் தங்கள் கண்ணோட்டங்களை பகிர்ந்து கொள்கிறார்கள் மற்றும் IIM-A ஆசிரியர்களுடன் தொடர்புகொண்டு அடுத்த தலைமுறை டிரான்ஸ்போர்ட்டர்களுக்கு வழிகாட்டுகிறார்கள்.

4

கற்ற கல்வியை நடைமுறைப்படுத்தாவிட்டால் அது முழுமையடையாது என்று நாங்கள் நம்புகிறோம். MPOWER வார் ரூமின் பின்னால் உள்ள சிந்தனையும் இதுதான். இந்தத் திட்டத்தின் மூலம், பங்கேற்பாளர்கள் தங்களின் MPOWER லேர்னிங்கை எவ்வாறு பயன்படுத்தினார்கள் மற்றும் அவர்களின் குடும்பப் போக்குவரத்து வணிகத்தை எவ்வாறு மேம்படுத்தினார்கள் என்பதை முன்வைக்கலாம். இந்தத் திட்டம் பங்கேற்பாளர்கள் தமது அனுபவங்களிலிருந்து பரஸ்பரம் கற்றுக் கொள்ளவும், உறவுகளை உருவாக்கவும் வாய்ப்பளிக்கிறது. இது IIM•A உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை வார் ரூமின் மூன்று பதிப்புகள் உள்ளன, இதில் சுமார் 66 பங்கேற்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

3

மஹிந்திராவின் அதிநவீன சாக்கன் ஆலையின் தனித்துவமான சுற்றுப் பயணத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ஒரு ஒப்பற்ற முயற்சி இது. மஹிந்திரா டிரக்குகள் மற்றும் இயந்திரங்களை வலுவான செயல்திறனுடன் தயாரிப்பதில் உள்ள முழுமையான டிரக் தயாரிப்பு செயல்முறை, தொழில்நுட்பம் மற்றும் தரக் கட்டுப்பாடு போன்றவற்றை அவர்கள் காண முடியும்.

Corporate address

பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்

மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட்

அப்பல்லோ புந்தர், கொலாபா, மும்பை, மகாராஷ்டிரா 400001.

தலைமை அலுவலகம்

மஹிந்திரா டிரக் & பஸ் பிரிவு

மஹிந்திரா டவர், 5th தளம், விங் 4 ப்ளாட் எண். A/1, சக்கன் இண்டஸ்ட்ரியல் ஏரியா ஃபேஸ் IV, போஸ்ட் - நிகோஜே சக்கன், தால் கெத், மாவட்டம். - புனே, மகாராஷ்டிரா. பின் 410 501.

தொலைபேசி

1800 315 7799 (தவறிய அழைப்பு)
1800 200 3600 (இலவசம்)

மின்னஞ்சல்

[email protected]
[email protected]