ஆட்டோ எக்ஸ்போ 2014

ஆட்டோ எக்ஸ்போ 2014ல் மஹிந்திரா சரக்கு வாகனம் மற்றும் பேருந்து லிமிடெட் (MTBL)

27 ஜனவரி 2014 அன்று, சின்ச்வாட் அலுவலகத்தில் ஒரு ஊடக உரையாடல் நடைபெற்றது, அதில் டெல்லியில் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போ 2014-க்கான மஹிந்திரா சரக்கு வாகனம் & பேருந்தின் திட்டங்கள் குறித்து முக்கிய வெளியீடுகள் அழைக்கப்பட்டன.

மஹிந்திரா சரக்கு வாகனங்கள் மற்றும் பேருந்துகளின் இயக்குனர் மற்றும் தலைவர் திரு. ராஜன் வதேரா மற்றும் மஹிந்திரா சரக்கு வாகனங்கள் மற்றும் பேருந்துகளின் எம்.டி. & சி.இ.ஓ., திரு. நளின் மேத்தா இருவரும், பிசினஸ் ஸ்டாண்டர்ட், டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்து பிசினஸ் லைன், பைனான்சியல் எக்ஸ்பிரஸ் மற்றும் பல நிறுவனங்களின் பத்திரிகையாளர்களுடன் உரையாடினர். இதில் மஹிந்திரா சரக்கு வாகனங்கள் மற்றும் பேருந்துகளின் வணிக அறிவிப்புகளை வழங்கினர். இது மட்டுமல்லாமல், இந்தியாவில் வணிக வாகன வணிகத்திற்கான மஹிந்திரா சரக்கு வாகனம் மற்றும் பேருந்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்கள்.

ஆட்டோ எக்ஸ்போ 2014-இன் நோக்கம், மஹிந்திரா சரக்கு வாகனங்கள் மற்றும் பேருந்து கள் வழங்கும் பல்வேறு வகையான தயாரிப்புகள், தயாரிப்புகளின் பண்புக்கூறுகள் மற்றும் திரட்டல்களை, ஒரு தனித்துவமான மற்றும் புதுமையான டிஸ்ப்ளேவில் காட்சிப்படுத்துவதாகும். HCV வரம்பில் உள்ள TRUXO 37 மற்றும் TRACO 49, TORRO 25 Tipper, Loadking ZOOM கண்டெயினர் டிரக் மற்றும் டிப்பர் ஆகியவை காட்சிப்படுத்தப்படும் சிலவற்றில் அடங்கும். கூடுதலாக, மஹிந்திரா சரக்கு வாகனம் மற்றும் பேருந்துப் பிரி வானது, ஒரு உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளின் விரிவான ரேஞ்ஜை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TRACO 49 டிராக்டர் டிரெய்லர் இப்போது 210 & 260 ஹெச்பி சக்தி வாய்ந்த MPOWER இன்ஜின்களுடன் கிடைக்கிறது,. மேலும் இவ்வகையில் நீண்ட பயணத்திற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கேபின் உள்ளது. கன்டெய்னரைஸ்டு ஹெவி-டியூட்டி லோடுகள், சிமெண்ட், ஸ்டீல், பெரிய அளவிலான கார்கோ, கனரக இயந்திரங்கள் போன்ற லோடு பயன்பாடுகளுக்காக இது சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறிப்பாக ஆற்றல் மற்றும் நம்பகத்தன்மையை விட்டுக் கொடுக்காமல் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

TRUXO 37, தனது அதிகபட்ச ஆற்றல் மற்றும் சிறந்த எரிபொருள் சிக்கனத்திற்காக புகழ் பெற்றது, இது ஒரு புதிய மற்றும் வலிமையான , மல்டி-ஆக்சில் டிரக் ஆகும், மஹிந்திரா டிரக்குகள் மற்றும் பஸ்கள் விரைவில் இதை அறிமுகப்படுத்தப் போகிறது. இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பையும் வருமானத்தையும் வழங்கும்.

ஆட்டோ எக்ஸ்போ 2014-க்கான திட்டங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மஹிந்திரா டிரக்ஸ் & பஸ்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி - தொழில்நுட்பம், தயாரிப்பு மேம்பாடு & ஆதாரம் & இயக்குனர் மற்றும் தலைவர், திரு ராஜன் வதேரா கூறியதாவது, "இந்திய கமர்ஷியல் வாகனத் துறையில், ஒரு வலுவான நிறுவனமாக இருப்பதை அதிகரிக்கும் வகையில், நாங்கள் புதிய தயாரிப்புகளில் கணிசமான முதலீடுகளைச் செய்வதற்கும், தற்போதுள்ள எங்களது தரத்தை மேம்படுத்துவதற்கும் நாங்கள் முழுமையாக கடமைப்பட்டுள்ளோம். ஆட்டோ எக்ஸ்போவில் எங்களின் மாறுபட்ட தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதன் மூலம் அவ்வாறு செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். மேலும், லைட் கமர்ஷியல் வாகனங்கள் மற்றும் கமர்ஷியல் வாகனங்களை உற்பத்தி செய்தல் போன்ற புதிய துறைகளில் நுழைவதற்கான வலுவான திட்டங்களை நாங்கள் வைத்திருக்கிறோம்".

இன்று இந்நிறுவனம் இந்தியவின் கரடு முரடான சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கும் வில் 1 லட்சத்திற்கும்அதிகமான லைட் கமர்ஷியல் வாகன டிரக்குகள் மற்றும் பஸ்கள் மற்றும் 9,000க்கும் மேற்பட்ட ஹெவி வர்த்தக வாகன டிரக்குகளை சர்வீஸ் செய்து கொண்டிருக்கிறது. இதற்காக 59 3S CV டீலர்ஷிப்கள், 334 அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்கள் மற்றும் உதிரிபாகங்கள் நெட்வொர்க்கை உள்ளடக்கிய 1,856 டச் பாயின்ட்கள் உள்ளன, இவை இந்தியா முழுவதும் உள்ள முக்கியமான டிரக்கிங் வழித் தடங்க ளுக்கான அணுகலை மேலும் மேம்படுத்த, 575 ரீடெயில் பாயிண்டுகளாக விரிவாக்கப்படுகின்றன.

வளர்ந்து சரும் மஹிந்திரா டிரக் & பஸ் நிறுவனம், ரூ. 300 கோடி முதலீடு செய்வதற்கான தங்கள் விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் லைட் கமர்ஷியல் வாகனங்கள், இன்டர்மீடியட் கமர்ஷியல் வாகனங்கள் மற்றும் உற்பத்தி கமர்ஷியல் வாகனங்கள் ஆகிய செக்மெண்டுகளில் புதிய பிராடக்ட் லைனை எக்ஸ்ப்ளோர் செய்ய முடியும். மேலும், தற்போதுள்ள லைட் கமர்ஷியல் வாகனங்களை புதுப்பித்தல் உட்பட, ட்ரக்ஸ் மற்றும் பஸ்ஸில் தற்போதைய பிராடக்ட் லைனை–அப்பை வலிமையாக்குவதற்கு மேலும் ரூ.200 கோடி முதலீடு செய்யப்படும்.

வணிகம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான அதன் அர்ப்பணிப்புக்கு ஏற்ப, மஹிந்திரா டிரக்ஸ் மற்றும் பஸ் நிறுவனம் 5 ஆண்டுகள் அல்லது 5 லட்சம் கிமீ வாரண்டி போன்ற பல புதுமையான முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இது இந்த தொழில்துறையில் முதல் முறையாகும். இந்த நிறுவனம் டிப்பர்களுக்கு ஆன்-சைட் வாரண்டியை அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் ஒரு கவர்ச்சிகரமான AMC பேக்கேஜையும் வழங்கியுள்ளது. Chassis-இல் 100% வரை ஃபைனான்ஸ் மற்றும் 5 ஆண்டுகள் வரை லோன் தவணை காலம் போன்ற சலுகைகளும் இந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.

Image

ஆட்டோ எக்ஸ்போ 2018

மஹிந்திரா தனது வணிக வரம்பைக் காட்டியுள்ளது... மேலும் படிக்க

Image

ஆட்டோ எக்ஸ்போ 2017

2017 ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா தனது வர்த்தக வாகனங்களின் வரம்பை காட்சிப்படுத்தியுள்ளது.

Image

ஆட்டோ எக்ஸ்போ 2016

மஹிந்திரா 2016 ஆட்டோ எக்ஸ்போவில் அதன் வணிக வாகனங்களின் வரம்பை காட்சிப்படுத்தியுள்ளது.

நிறுவன முகவரி

பதிவு செய்யப்பட்ட தலைமை அலுவலகம்

பதிவு செய்யப்பட்ட தலைமை அலுவலகம்

மஹிந்திரா டவர், 5th தளம், விங் 4 ப்ளாட் எண். A/1, சக்கன் இண்டஸ்ட்ரியல் ஏரியா ஃபேஸ் IV, போஸ்ட் - நிகோஜே சக்கன், தால் கெத், மாவட்டம். - புனே, மகாராஷ்டிரா. பின் 410 501.

தொலைபேசி

022- 6652 6000
1800 200 3600 (இலவசம்)

மின்னஞ்சல்

[email protected]